"இளைஞர்கள் மட்டும் சினிமாப் பைத்தியங்களாகவும் பெண் பித்தர்களாகவும் இல்லாமல் சமூகப் பிரக்ஞையோடும் துடிப்போடும் இருந்தால் இந்த நாட்டில் எல்லாவகைச் சுரண்டல்களையும் உடனே ஒழித்துவிட முடியும்! சுமார் ரக சினிமாக்களும் மயக்கமருந்து போல் காம வெறியைப் பரப்பும் பத்திரிக்கைகளும் இந்நாட்டு இளைஞர்களை இன்னும் அரைவிழிப்பு நிலையிலையே வைத்துள்ளன. பிற்போக்குச் சக்திகளின் கையில் சிக்கியிருக்கும் இந்த இரண்டு சாதனங்களும் திருந்தாதவரை நாட்டுக்குள் சுரண்டலை ஒழிப்பது மிகவும் சிரமமான காரியமாகத்தான் இருக்கும்"
--நா.பார்த்தசாரதி (சாயங்கால மேகங்கள்)
Tuesday, 29 May 2012
சுரண்டலை ஒழிப்பது கடினம்
Friday, 11 May 2012
உன்னைக் காதலிப்பவர்களில் ஒருவன்
அந்தி மயங்கும் வேளையிலே தரணி ஆள வந்தவளே!
உலகத்தை இருட்டாக்கி நீமட்டும் ஒளிர்வதென்ன?
தோழியரின் புடைசூழ நீ வரும்போதெல்லாம்
என் முற்றத்தில் விழிவைத்துக் காத்திருப்பேன்;
என்னை காணும்போது உன் கன்னங்கள் சிவப்பதேனோ?
கருநீலப் புடவை உடுத்தியவளே!
பாலின் வெண்ணிறம் கொண்டவளே!
உன்னை காணும்போதெல்லாம் என் கண்கள் குளிருவதேனோ?
கண்கள் மட்டுமா குளிரந்தன?
இல்லை இல்லை என் மனமுமல்லவா குளிர்ந்தது!
நீ தேய்ந்தாலும் வளர்ந்தாலும் குணத்தில் தேய்வதில்லை;
அதனால் நானும் உன்னை வெறுப்பதில்லை;
நீ மழுதாய் காட்சிதரும் நாளே
எனக்கு சொர்க்கம்!
நீ முழுதாய் மறையும் நாளோ...!
உன்னை அடையப்போகும் நாள் எந்நாளோ?
அந்நாளை ஆவலுடன் எதிர்நோக்கும்,
உன்னை காதலிக்கும் கோடிக்கணக்கானவர்களில் ஒருவன்;
என்னை மட்டுமே நீ காதலிப்பாய் என நம்பும் ஒருவன்.
Thursday, 10 May 2012
பாரதியாரின் உறுதிமொழிகள்
இயன்றவரை தமிழே பேசுவேன்,தமிழே எழுதுவேன்.சிந்தனை செய்வது தமிழிலேயே செய்வேன்.எப்போதும் பராசக்தி... முழு உலகின் முதற்பொருள்- அதனையே தியானஞ் செய்து கொண்டிருக்க முயல்வேன். அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருக்க முயல்வேன்.
* * *
பொழுது வீணே கழிய இடங்கொடேன்.லௌகிக காரியங்களை ஊக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும், அவை தோன்றும் பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன்.
உடலை நல்ல காற்றாலும், இயன்றவரை சலிப்பதாலும் தாய்மையுறச் செய்வேன்.
மறைத்தும் தற்புகழ்ச்சி பாராட்டுதல் விரும்பேன்.
மூடரின் உள்ளத்தில் என்னைப் பற்றிபொய் மதிப்புண்டாக இடங்கொடேன்.
சர்வ சக்தியுடைய பரம்பொருளைத் தியானத்தால் என்னுள்ளே புகச்செய்து எனது தொழில்களெல்லாம் தேவர்களின் தொழில் போல் இயலுமாறு சூழ்வேன்.
பொய்மை, இரட்டுரமொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.
இடையறாத தொழில் புரிந்து இவ்வுலக பெருமைகள் பெற முயல்வேன். இல்லாவிடின் விதிவசமென்று மகிழ்சியோடிருப்பேன்.
எப்போதும் மலர்ந்த முகம், இனியசொல், தெளிந்த சித்தம் இவற்றோடிருப்பேன். ஓம்.
*
Monday, 7 May 2012
பாரதியின் பெருமை
எம்மான் பாரதியின் பாட்டை கேட்டால்
எம்மானும் துள்ளி குதித்தாடும்
அவன் பெயரை உச்சரித்தாலே
பயங்கள் பயந்தோடும்
அமைதிக் கொண்ட பெண்ணும்
அவனின் சக்தி பாடலைக் கேட்டிட்டால்
பராசக்தியாவாள்
அவனின் கண்ணம்மா பாடலைக் கேட்டிட்டால்
காதலில் விருப்பமில்லா இளைஞனுக்கும் காதல் செய்யத்தோன்றும்
அவனின் கண்ணண் பாட்டை கேட்டிட்டால்
நாத்திகனும் ஆத்திகனாவான்
அவனின் சுதந்திர பாடல்களைக்
கேட்டிட்டால்
சுதந்திரத்தின் அருமைத் தெரியும்
அவனின் பாஞ்சாலி சபதத்தை படித்திட்டால் பெண்ணின் பெருமைத் தெரியும்
அவனின் குயில் பாட்டை பாடினால்
கவிதையினுள் தத்துவத்தை உணர இயலும்
மொத்தத்தில் அவன் கவிதைகளை ஆழ்ந்து படித்தோரெல்லாம் கவிஞராவர்.
யாமறிந்த புலவர்களிலே கம்பனைப்போல்,வள்ளுவர்போல்,இளங்கோவைப்போல், பாரதியைப்போல்
பூமிதனில், யாங்கணுமே பிறந்ததில்லை;
உண்மை,வெறும் புகழ்ச்சில்லை.
-------அன்பன்
சக்கரவர்த்தி பாரதி
Sunday, 6 May 2012
கல்வியின் தரம் தேய்கிறது
பௌர்ணமி போன்று ஒளி வீச வேண்டிய கல்வி அமாவாசை போன்று ஒளி மங்கியுள்ளது.ஞானத்தை பெறுவதற்காக கல்வி கற்பது போய் வெறும் வேலைக்கு உதவுவதாக மட்டுமே இக்காலக்கல்வி கற்பிக்கப்படுகிறது.மதிப்பெண்கள் பெறுபவரெல்லாம் நன்றாய் வாழப்போகிறவர்களாம்,மதிப்பெண் பெறமுடியாது போனவரெல்லாம் முட்டாள்களாம்.
ஒருவனின் செயல்திறனை நல்வழியில் ஊக்குவிப்பதற்கு கல்வி பயன்பட வேண்டுமேயன்றி அவன் மனனம் செய்யும் திறனை ஊக்குவிப்பதற்கல்ல.
இதனை உணர்ந்து அரசும் தனியார் பள்ளிகளும் என்று சரியான கல்வியளிக்கிறதோ அன்றுதான் நிலையான பௌர்ணமி மாணவர்களின் வாழ்வில் பிரகாசிக்கும்.
வழக்கு எண் 18/9
இன்றைய சுகவாழ்வு வாழ நினைக்கும் இளைஞர்களும்
காதலென நம்பி உடனே காதலிக்கத் துடிக்கும்
இளம் பெண்களும்
தங்கள் பிள்ளைகள் வெளியில் என்ன செய்கிறார்கள் என அறியாத பெற்றோர்களும் பார்க்க வேண்டிய முதல் தர திரைப்படம்
'வழக்கு எண் 18/9'.
பாலாஜி சக்திவேல் அவர்கட்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..
யாரும் குறை கூற முடியாத யதார்த்தமான நம்மை சுற்றி நடக்கும் பலரும் அறியாத பிரச்சனைகளை அறிய வைத்திருக்கிறார்.
ஒரு பணக்கார இளைஞன் செய்யும் தவற்றிற்க்காக இரு ஏழைகள் எவ்வாறு பலியாகின்றனர் என்பதுதான் கதை.
அதை யதார்த்தமான நிகழ்ச்சிகளுடன் நம் மனதில் பதிய வைத்திருக்கிறார் இயக்குநர்.
புத்தகங்கள்
அறிவினை விருத்தி செய்பவை;
ஆளுமையை வளர்ப்பவை;
அமைதியை தருபவை;
அழகான கவிதைகளை
அருமையான கதைகளை
அற்புதமான புதினங்களை
ஓப்பற்ற இதிகாசங்களை
எளிதில் உணர இயலாத வேதாந்தங்களை
ஒன்று திரட்டி தன்னகத்தே வைத்துள்ள பொக்கிஷ பெட்டிகள்...
அதை உணர்ந்து அனுபவித்து படிப்பவனே ஞானியாகிறான்.
Saturday, 5 May 2012
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
பாடல்: எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
வரிகள் : புலமை பித்தன்
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்
தொகுப்பு: பாரதி (திரைப்படம்)
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
வரிப்புலி அதள் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பென்னும் திமி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம்
தரத் திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனைத் தரத்தகும் நெறி
வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கரு நீலம் எனத்தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் என்னும் அடியார்க்கொரு தொண்டன்
பற்று தளைக்கு நெருப்பவன் ஒற்றைக் கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லீலை
உடுக்களில் சரம் தொடுத்தவன் தலை முடிக் கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம் தோறும் அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
முற்றப் படித்து முடித்த ஒருத்தன்
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
புலால் உண்ணாதே
251-- தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.
மனிதன்
டார்வினின் கூற்றை பல முறை சிந்தித்து பார்த்தும் விளங்கவில்லை.
மனிதன் குரங்கிலிருந்து வந்தவனா?
குரங்குகளால் துரத்தப்பட்டவனா?
கவிஞன்
கவிதை எழுதுபவன் கவியன்று.
கவிதையே வழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன்,
அவனே கவி.
--பாரதியார்