Thursday, 10 May 2012

பாரதியாரின் உறுதிமொழிகள்

இயன்றவரை தமிழே பேசுவேன்,தமிழே எழுதுவேன்.சிந்தனை செய்வது தமிழிலேயே செய்வேன்.எப்போதும் பராசக்தி... முழு உலகின் முதற்பொருள்- அதனையே தியானஞ் செய்து கொண்டிருக்க முயல்வேன். அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருக்க முயல்வேன்.
     *         *          *
பொழுது வீணே கழிய இடங்கொடேன்.லௌகிக காரியங்களை ஊக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும், அவை தோன்றும் பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன்.
உடலை நல்ல காற்றாலும், இயன்றவரை சலிப்பதாலும் தாய்மையுறச் செய்வேன்.
மறைத்தும் தற்புகழ்ச்சி பாராட்டுதல் விரும்பேன்.
மூடரின் உள்ளத்தில் என்னைப் பற்றிபொய் மதிப்புண்டாக இடங்கொடேன்.
சர்வ சக்தியுடைய பரம்பொருளைத் தியானத்தால் என்னுள்ளே புகச்செய்து எனது தொழில்களெல்லாம் தேவர்களின் தொழில் போல் இயலுமாறு சூழ்வேன்.
பொய்மை, இரட்டுரமொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.
இடையறாத தொழில் புரிந்து இவ்வுலக பெருமைகள் பெற முயல்வேன். இல்லாவிடின் விதிவசமென்று மகிழ்சியோடிருப்பேன்.
எப்போதும் மலர்ந்த முகம், இனியசொல், தெளிந்த சித்தம் இவற்றோடிருப்பேன். ஓம்.
                  
                     *


No comments:

Post a Comment