Monday 3 December 2012

மதுரை

பாண்டியர் குதிரைக்
குளம்படியும் - தூள்
பறக்கும் இளைஞர்
சிலம்படியும் - மதி
தோண்டிய புலவர்
சொல்லடியும் - இளம்
தோகைமார்தம்
மெல்லடியும்
மயங்கி ஒலித்த
மாமதுரை - இது
மாலையில் மல்லிகைப்
பூமதுரை

நீண்டு கிடக்கும் வீதிகளும்
- வான்
நிமிர்ந்து முட்டும்
கோபுரமும்
ஆண்ட பரம்பரைச்
சின்னங்களும் - தமிழ்
அழுந்தப் பதிந்த
சுவடுகளும்
காணக் கிடைக்கும்
பழமதுரை - தன்
கட்டுக் கோப்பால்
இளமதுரை

மல்லிகை மௌவல்
அரவிந்தம் - வாய்
மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம்
குருக்கத்தி - இவை
கொள்ளை அடித்த
வையைநதி
நாளும் ஓடிய நதிமதுரை -
நீர்
நாட்டிய மாடிய பதிமதுரை

தென்னவன்
நீதி பிழைத்ததனால் - அது
தெரிந்து மரணம்
அழைத்ததனால்
கண்ணகி திருகி எறிந்ததனால்
- அவள்
கந்தக முலையில்
எரிந்ததனால்
நீதிக் கஞ்சிய
தொன்மதுரை - இன்று
ஜாதிக் கஞ்சும்
தென்மதுரை

தமிழைக் குடித்த
கடலோடு - நான்
தழுவேன்
என்றே சபதமிட்டே
அமிர்தம் பரப்பும்
வையைநதி - நீர்
ஆழி கலப்பது தவிர்ப்பதனால்
மானம் எழுதிய
மாமதுரை - இது
மரபுகள்
மாறா வேல்மதுரை

மதுரை தாமரைப்
பூவென்றும் - அதன்
மலர்ந்த
இதழே தெருவென்றும்
இதழில் ஒட்டிய தாதுக்கள்
- அவை
எம்குடி மக்கள்
திரளென்றும் - பரி
பாடல் பாடிய
பால்மதுரை - வட
மதுரா புரியினும்
மேல்மதுரை

மீசை வளர்த்த
பாண்டியரும் - பின்
களப்பிரர் பல்லவர்
சோழர்களும் - மண்
ஆசை வளர்த்த அந்நியரும்
- அந்த
அந்நியரில்சில
கண்ணியரும்
ஆட்சிபுரிந்த
தென்மதுரை -
மீனாட்சியினால்
இது பெண்மதுரை

மண்ணைத் திருட
வந்தவரைத் - தம்
வயிற்றுப்
பசிக்கு வந்தவரை - செம்
பொன்னைத் திருட
வந்தவரை - ஊர்
பொசுக்கிக் போக
வந்தவரை - தன்
சேயாய் மாற்றிய
தாய்மதுரை - அவர்
தாயாய் வணங்கிய
தூய்மதுரை

அரபுநாட்டுச்
சுண்ணாம்பில் - கரும்பு
அரைத்துப் பிழிந்த
சாறர்ற்றி
மரபுக்கவிதை படைத்தல்போல்
- ஒரு
மண்டபம்
திருமலை கட்டியதால்
கண்கள் மயங்கும்
கலைமதுரை - இது
கவிதைத் தமிழின்
தலைமதுரை

வையைக் கரையின்
சோலைகளும் - அங்கு
வரிக்குயில் பாடிய
பாடல்களும்
மெய்யைச் சொல்லிய
புலவர்களும் - தம்
மேனி கறுத்த மறவர்களும்
மிச்சமிருக்கும்
தொன்மதுரை - தமிழ்
மெச்சி முடிக்கும்
தென்மதுரை

போட்டி வளர்க்கும்
மன்றங்களும் - எழும்
பூசை மணிகளின்
ஓசைகளும் - இசை
நீட்டி முழங்கும்
பேச்சொலியும் - நெஞ்சை
நிறுத்திப் போகும்
வளையொலியும்
தொடர்ந்து கேட்கும்
எழில்மதுரை - கண்
தர்ங்காதிருக்கும்
தொழில்மதுரை

ஆலைகள் தொழில்கள்
புதுக்காமல் - வெறும்
அரசியல் திரைப்படம்
பெருக்கியதில்
வேலைகள் இல்லாத்
திருக்கூட்டம் - தினம்
வெட்டிப்பேச்சு வளர்ப்பதனால்
பட்டாக் கத்திகள்
சூழ்மதுரை - இன்று
பட்டப் பகலில் பாழ்மதுரை

நெஞ்சு வறண்டு போனதனால்
வையை
நேர்கோடாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர் -
நதியைப்
பட்டாப் போட்டுக்
கொண்டதனால்
முகத்தை இழந்த
முதுமதுரை - பழைய
மூச்சில் வாழும்
பதிமதுரை
  
     -கவிஞர்.வைரமுத்து

Friday 7 September 2012

மரம்

வணக்கம்
மரங்களைப் பாடுவேன்.

வாரும்  வள்ளுவரே
மக்கட்
பண்பில்லாதவரை  என்ன சொன்னீர்?
மரம் என்றீர்!
மரம் என்றால் அவ்வளவு மட்டமா?

வணக்கம்,அவ்வையே
நீட்டோலை வாசியான்
யார் என்றீர்?
மரம் என்றீர்!
மரம் என்றால் அத்தனை இழிவா?

பக்கத்தில் யாரது பாரதி தானே?
பாஞ்சாலி மீட்க்காத பாமரரை என்ன
வென்றீர்?
நெட்டை மரங்கள் என்றீர்!
மரங்கள் என்றால் அவ்வளவு கேவலமா?

மரம் சிருஷ்டியில் ஒரு சித்திரம்,
பூமியின் ஆச்சிரியகுறி,
நினைக்க நினைக்க நெஞ்சூரும் அனுபவம்,
விண்மீனுக்கு தூண்டில் போடும் கிளைகள்,
சிரிப்பை ஊற்றி வைத்த இலைகள்,
உயிர் ஒழுகும் மலர்கள்,
மனிதன் தரா ஞானம் மரம் தரும் எனக்கு!
மனிதன் தோன்றும் முன் மரம் தொன்றிற்று!
மரம் நமக்கு அண்ணன்,
அண்ணனை பழிக்காதீர்கள்!

மனித ஆயுள் குமிழிக்குள் கட்டிய
கூடாரம்,
மரம் அப்படியா?
வளரும் உயிர்களில் ஆயுள் அதிகம்
கொண்டது அதுவேதான்!

மனித வளர்ச்சிக்கு முப்பது வந்தால்
முற்றுப் புள்ளி.
மரம் இருக்கும் வரை பூ பூக்கும்
இறக்கும் வரை காய் காய்க்கும்.

வெட்டி நட்டால் கிளை மரமாகுமே,
வெட்டி நட்டால் கரம் உடம்பாகுமா?

மரத்தை அறுத்தால் ஆண்டு வளையம்
வயது சொல்லும்.
மனிதனை அறுத்தால் உயிரின்
செலவைத்தான்
உறுப்பு சொல்லும்.

மரத்திற்கும் வழுக்கை விழும்
மறுபடி முளைக்கும்.
நமக்கோ உயிர் பிரிந்தாலும்  மயிர்
உதிர்ந்தாலும்.
ஒன்றென்று அறிக!

மரங்கள் இல்லையேல்
காற்றை எங்கே போய் சலவை செய்வது?

மரங்கள் இல்லையேல் மழைக்காக எங்கே போய்
மனுச் செய்வது?

மரங்கள் இல்லையேல் மண்ணின் மடிக்குள்ளே
ஏதப்பா ஏறி?

பறவைக்கும் விலங்குக்கும் மரம் தரும்
உத்திரவாதம் மனிதர் நாம் தருவோமா?

மனிதனின் முதல் நண்பன் மரம்!
மரத்தின் முதல் எதிரி மனிதன்!
ஆயுதங்களை மனிதன் அதிகம்
பிரயோகித்தது மரங்களின் மீதுதான்!

உண்ண கனி,
ஒதுங்க நிழல்,
உடலுக்கு மருந்து,
உணர்வுக்கு விருந்து,
அடைய குடில்,
அடைக்க கதவு,
அழகு வேலி,
ஆட தூலி,
தடவ தைலம்,
தாளிக்க எண்ணை,
எழுத காகிதம்,
எரிக்க விறகு

மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்!!
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்!!

பிறந்தோம் தொட்டில் மரத்தின் உபயம்,
நடந்தோம் நடைவண்டி மரத்தின் உபயம்,
எழுதினோம் பென்சில் பலகை மரத்தின்
உபயம்,
மணந்தோம் மாலை சந்தனம் மரத்தின் உபயம்,
கலந்தோம் கட்டில் என்பது மரத்தின் உபயம்,
துயின்றோம் தலையணை பஞ்சு மரத்தின்
உபயம்,
நடந்தோம் பாதுகை ரப்பர் மரத்தின் உபயம்,
இறந்தோம் சவப்பெட்டி பாடை மரத்தின்
உபயம்,
எறிந்தோம் சுடலை விறகு மரத்தின்
உபயம்

மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்,
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்,
மனிதா மனிதனாக வேண்டுமா மரத்திடம்
வா ஒவ்வொரு மரமும் போதி மரம்!!

    -வைரமுத்து


Go not to the temple


Go not to the temple to put flowers
upon the feet of God,
First fill your own house with the
Fragrance of love...

Go not to the temple to light candles
before the altar of God,
First remove the darkness of sin from
your heart...

Go not to the temple to bow down
your head in prayer,
First learn to bow in humility before
your fellowmen...

Go not to the temple to pray on
bended knees,
First bend down to lift someone who
is down-trodden. ..

Go not to the temple to ask for
forgiveness for your sins,
First forgive from your heart those
who have sinned against you.
  
     -GURUDEV Rabindranath Tagore


Friday 10 August 2012

வாளினை எடடா!


வலியோர்சிலர் எளியோர்தமை
வதையேபுரி குவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?
உலகாளஉ னதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனேவிழி தமிழா!

கலையேவளர்! தொழில்மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு
விடநேர்கரு விகள்சேர்!
நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர்நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!
அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியே!உயர்
குணமேவிய தமிழா!

தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஜனநாயகம்
எனவேமுர சறைவாய்!
இலையேஉண விலையேகதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்!
   
             -பாரதிதாசன்


Friday 27 July 2012

மதனின் வந்தார்கள் வென்றார்கள் மின்னூல்

மின்நூலிற்கு கீழ் காணும் லிங்கை சுட்டவும்

link

ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன்,
ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர்
பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்து வைத்திருப்பவர்.
மதன் எதையும் சுவைபடச் சொல்லும் ஆற்றல் படைத்தவர்.
ஜூனியர் விகடனில் மொகலாய சரித்திரத்தை அவர்
எழுதத் தொடங்கியபோது, வடக்கே பாபர்
மசூதி சர்ச்சை பெரிய அளவில்
கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. 'இந்த
நேரத்தில் இப்படி ஒரு தொடரா?' என்று சிலர்
நினைத்தார்கள். சிலர் பயப்படவும் செய்தார்கள். ஆனால்,
'ஆரம்பித்த நேரம் சரியில்லையோ' என்று ஒரு கணம்கூட
அவர் தயங்கவில்லை. 'இதுதான் சரியான சமயம்...
உண்மைகளைச் சொல்வதனால் நன்மைதான் ஏற்படும்...
தொல்லைகள் வருவதில்லை' என்ற திடமான
நம்பிக்கையோடு எழுதினார்.
மதன் மொகலாய சரித்திரத்தைச் சொல்லச் சொல்ல,
உண்மையில் ஒரு மகத்தான வெற்றியாக தொடர் அமைந்தது.
எந்தக் களங்கமும் அவர் எழுத்தில் இருக்கவில்லை.
ஒவ்வொரு மன்னரையும் நேசித்து,
ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவரே நேரில்
இருந்து பார்த்தது போல எழுதிய
பாங்கு அதிசயமானது. வாசகர்களும் 'சொக்குப்பொடி'
போட்டது போல அவர் எழுத்துக்கு மயங்கினார்கள்.
லட்சக்கணக்கானோர் படித்தார்கள், பிரமித்தார்கள்.


Thursday 26 July 2012

கி.மு.-கி.பி. ஒலி புத்தகம்

'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த
மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும்
பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால்
வரையவும் முடியும்;
பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்
சென்று ஆதிவாசி அருந்திய ஆகாரம் பற்றி எழுதவும்
முடியும். உலகில் முதலில் தோன்றியது பெண்.
அதாவது ஆதாம் அல்ல 'ஏவாள்'தான் என்கிறார்.
விஞ்ஞான அடிப்படையில் அதை உறுதியாகக்
கூறிவிட்டு, 'அட' சக்தி இல்லையேல் சிவம்
இல்லை என்பது உண்மைதான்' என 'லோக்கல்'ஆக சந்தோஷப்பட
வைக்கிறார்.
இந்த நூலுக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. உலகம்
தோன்றியது, மனிதன் பிறந்தது, நாகரிகங்கள்
உண்டானது, மதங்கள் வளர்ந்தது, போர்கள் உண்டது என
வரலாறு தெரிந்து கொள்ளலாம்.
இன்னொரு சிறப்பு, இதையெல்லாம் சரித்திரப்
பாடல்கள்போல போரடிக்காமல் மதன் ஸ்டைலில்
படுஜாலியாகவே ருசிக்கலாம்! '

கி.மு.-கி.பி. ஒலி புத்தகத்திற்கு கீழ் காணும் லிங்கினை அழுத்தவும்

link


கீதாஞ்சலி தமிழில்

கீதாஞ்சலி கவிதைகளை தமிழில் படிக்க கீழ் கண்ட லிங்கினை அழுத்தவும்

கீதம்


Rabindranath tagore works

More tagore's works are here this link

Tagore


Tuesday 17 July 2012

A Thing of beauty

A thing of beauty is a joy for ever:
Its loveliness increases; it will never
Pass into nothingness; but still will keep
A bower quiet for us, and a sleep
Full of sweet dreams, and health, and quiet breathing.

Therefore, on every morrow, are we wreathing
A flowery band to bind us to the earth,
Spite of despondence, of the inhuman dearth
Of noble natures, of the gloomy days,
Of all the unhealthy and o'er-darkened ways
Made for our searching: yes, in spite of all,
Some shape of beauty moves away the pall
From our dark spirits. Such the sun, the moon,
Trees old, and young, sprouting a shady boon
For simple sheep; and such are daffodils
With the green world they live in; and clear rills
That for themselves a cooling covert make
'Gainst the hot season; the mid-forest brake,
Rich with a sprinkling of fair musk-rose blooms:
And such too is the grandeur of the dooms
We have imagined for the mighty dead;
All lovely tales that we have heard or read:
An endless fountain of immortal drink,
Pouring unto us from the heaven's brink.

Nor do we merely feel these essences
For one short hour; no, even as the trees
That whisper round a temple become soon
Dear as the temple's self, so does the moon,
The passion poesy, glories infinite,
Haunt us till they become a cheering light
Unto our souls, and bound to us so fast
That, whether there be shine or gloom o'ercast,
They always must be with us, or we die.

Therefore, 'tis with full happiness that I
Will trace the story of Endymion.
The very music of the name has gone
Into my being, and each pleasant scene
Is growing fresh before me as the green
Of our own valleys: so I will begin
Now while I cannot hear the city's din;
Now while the early budders are just new,
And run in mazes of the youngest hue
About old forests; while the willow trails
Its delicate amber; and the dairy pails
Bring home increase of milk. And, as the year
Grows lush in juicy stalks, I'll smoothly steer
My little boat, for many quiet hours,
With streams that deepen freshly into bowers.
Many and many a verse I hope to write,
Before the daisies, vermeil rimmed and white,
Hide in deep herbage; and ere yet the bees
Hum about globes of clover and sweet peas,
I must be near the middle of my story.
O may no wintry season, bare and hoary,
See it half finished: but let Autumn bold,
With universal tinge of sober gold,
Be all about me when I make an end!
And now at once, adventuresome, I send
My herald thought into a wilderness:
There let its trumpet blow, and quickly dress
My uncertain path with green, that I may speed
Easily onward, thorough flowers and weed.

By

JOHN KEATS


Sunday 8 July 2012

பாரதியாரின் கட்டுரை-'புனர் ஜென்மம்'

பாப புண்ணியங்களுக்கு இணங்க மானிடரின் கர்மத்தினுடைய பலனாக அடுத்த ஜென்மத்தில் உயர்ந்த பிறப்பேனும் தாழ்ந்த பிறப்பேனும் கிடைக்கும் என்பது நமது தேசத்து பொது நம்பிக்கை.பாவம் செய்யும் ஒருவனை,'நீ அடுத்த ஜென்மம் மிருகமாய்ப் பிறப்பாய்' என்றால் அவனுடைய மனம் பதைக்கிறது.ஆனால் இந்த ஜன்மத்திலேயே மனிதர்கள் தாம் மிருகங்களைப் போலிருப்பதைக் கவனிப்பது கிடையாது.ஒவ்வொரு நிமிஷத்திலேயும் ஒருவன் நினைக்கும் நினைப்புகளும் செய்யும் செய்கைகளும் அவன் பலவிதப் பிறவிகளை அடைவதற்குக் காரணமாகின்றன. இந்த உலகத்திலேயே, இப்பொழுதே,ஒரேசரீரத்திலுள்ள ஒருவன் ஆயிரம் பிறவிகள் பிறந்து மடிகின்றான்.'ஒவ்வொரு சஷணமும் ஒவ்வொருவனும் பிறந்்து  பிறந்து மடிகின்றான்.ஒவ்வொரு சஷணமும் ஒவ்வொருவனும் பிறந்து பிறந்து மாய்கிறான,என்றும் கூறத்தகும்.மிருகங்களைப் போன்ற மனிதர்களை நாம் பார்த்ததில்லையா?நம்மை நாம் கவனிக்குமிடத்து,எத்தனை விதமான மிருகங்களாக இருந்திருக்கிறோம் என்பது தெரியும்.வஞ்சனையாலும் குத்திரத்தாலும்;சமயத்திற்கேற்பப் பலவித கபடங்கள்செய்து ஜீவிப்பவன் நரிதானே? ஊக்கமில்லாமல் ஏதேனுமொன்றை நினைத்துக் கொண்டு மனஞ்சோர்ந்து தலை கவிந்து உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு.மறைந்திருந்து பிறர்க்கு தீங்கு செய்பவன் பாம்பு.தாமதத்திலும் புகழிலும் விருப்பமில்லாமல்,அற்ப சுகத்திலே மூழ்கிக் கிடப்பவன் பன்றி.சுயாதீனத்திலே இச்சை இல்லாமல்,பிறர்களுக்கு பிரியமாக நடந்து கொண்டு,அவர்கள் கொடுத்ததை வாங்கி வயிறு வளர்ப்பவன் நாய்.கண்ட விஷயங்களிளெல்லாம் திடீர் திடீர் என்று கோபமடைகிறவன் வேட்டை நாய்.காங்கிரஸ் சபையிலேயும் சேர்ந்து கொண்டு,ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் ஹிதமாக நடக்க வேண்டுமென்ற விருப்பமுடைய 'மேத்தா' கட்சியைச் சேர்ந்தவன் வௌவ்வால்.அறிவுத் துணிவால் பெரும் பொருள்களைத் தேர்ந்து கொள்லாமல்,முன்னோர் சாஸ்திரங்களைத் திரும்பத்திரும்ப வாயினால் சொல்லிக்கொண்டிருப்பவன் கிளிப்பிள்ளை.புறர் தன்னை எவ்வளவு அவமதிப்பாக நடத்திய போதிலும்,அவன் அக்கிரமத்தை நிறுத்த முயலாமல் தன் மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் கழுதை.்
்வீண் மினுக்கு மினுக்கி டம்பம் பாராட்டுகிகவன் வான்கோழி.கல்வியறிவில்லாதவனை மிருகக் கூட்டத்திலேயும் சேர்க்கலாகாது,அவன் தூண்.தான் சிறமப்படாமல் பிறர் சொத்தை அபகரித்து உண்பவன் கழுகு.ஓர் நவீன உண்மை வரும்போது,அதை ஆவலோடு அங்கிகரித்துக் கொள்ளாமல் வெறுப்படைகிறவன்(வெளிச்சத்தை கண்டு அஞ்சும்) ஆந்தை.

     ஒவ்வொரு நிமிஷமும் சத்தியமே பேசித் தர்மத்தை ஆதரித்துப் பரமார்த்தத்தை அறிய முயலுகிறவனே மனிதனென்றும் தேவனென்றும் சொல்லுவதற்கு உரியவனாவான்.மிருக ஜன்மங்களை நாம் ஒவ்வொருவரும் சஷணந்தோறும் நீக்க முயல வேண்டும்.


Tuesday 26 June 2012

The World Is To Much With Us

The world is too much with us; late and soon,
     Getting and spending, we lay waste our powers:
     Little we see in Nature that is ours;
     We have given our hearts away, a sordid boon!
     This Sea that bares her bosom to the moon;
     The winds that will be howling at all hours,
     And are up-gathered now like sleeping flowers;
     For this, for everything, we are out of tune,
     It moves us not.--Great God! I'd rather be
     A Pagan suckled in a creed outworn;
     So might I, standing on this pleasant lea,
     Have glimpses that would make me less forlorn;
     Have sight of Proteus rising from the sea;
     Or hear old Triton blow his wreathed horn.
 
-William wordsworth

Monday 25 June 2012

The Suicide's Argument

Ere the birth of my life, if I wished it or
no

No question was asked me--it could
not be so !

If the life was the question, a thing sent
to try

And to live on be YES; what can NO
be ? to die.

NATURE'S ANSWER

Is't returned, as 'twas sent ? Is't no
worse for the wear ?

Think first, what you ARE ! Call to mind
what you WERE !

I gave you innocence, I gave you hope,

Gave health, and genius, and an ample
scope,

Return you me guilt, lethargy, despair ?

Make out the invent'ry ; inspect,
compare !

Then die--if die you dare !

    -Samuel Taylor Coleridge


Little flute

Thou hast made me endless, such is thy pleasure.

This frail vessel thou emptiest again and again, and fillest it ever with fresh life.

This little flute of a reed thou hast carried over hills and dales, and hast breathed through it melodies eternally new.

At the immortal touch of thy hands my little heart loses its limits in joy and gives birth to utterance ineffable.

Thy infinite gifts come to me only on these very small hands of mine.

Ages pass, and still thou pourest, and still there is room to fill.

  -Rabindranath Tagore(Gitanjali)


Thursday 21 June 2012

"கவிதை" பாரதியின் பார்வையில்...

"எதுகை மோனைகளுக்காகச் சொல்ல வந்த பொருளை மாற்றிச் சொல்லும் பண்டிதன் சரஸ்வதி கடாட்சத்தை இழந்து விடுவான்.
யமகம் திரிபு முதலிய சித்திரக் கட்டுக்களை விரும்பிச் சொல்லுக்குத் தக்கபடி பொருளை திரித்துக் கொண்டு போகும் கயிறு பின்னிப் புலவன் வாணியின் திருமேணியை நோகும்படி செய்கிறான்.அவசியமில்லாத அடை மொழிகள் கோப்போன் அந்த தெய்வத்தின் மீது புழுதியை சொரிகிறான்.
உலகத்தார்க்குப் பொருள் விளங்காதபடி இலக்கியஞ் செய்வோன் அந்தச் சக்தியை கரித்துணியாலே மூடுகின்றான்".

   "சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது சோதி மிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மாகவிதை"
        -மகாகவி பாரதியார்

Friday 1 June 2012

லஞ்சம்

லஞ்சம் என்கிற ராட்சஸக் குழந்தை இரட்டை மடங்கு சத்துணவுடன் இங்கு வளர்க்கப்படுகிறது.மக்களும் அதிகாரிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு அதை வளர்கிறார்கள்.பாதித்தவர்கள்,பாதிக்கப்பட்டவர்கள் இருதரப்பாராலுமே பேணி வளர்க்கப்படும் அபூர்வக் குழந்தை அது.
-நா.பார்த்தசாரதி

Tuesday 29 May 2012

சுரண்டலை ஒழிப்பது கடினம்

"இளைஞர்கள் மட்டும் சினிமாப் பைத்தியங்களாகவும் பெண் பித்தர்களாகவும் இல்லாமல் சமூகப் பிரக்ஞையோடும் துடிப்போடும் இருந்தால் இந்த நாட்டில் எல்லாவகைச் சுரண்டல்களையும் உடனே ஒழித்துவிட முடியும்! சுமார் ரக சினிமாக்களும் மயக்கமருந்து போல் காம வெறியைப் பரப்பும் பத்திரிக்கைகளும் இந்நாட்டு இளைஞர்களை இன்னும் அரைவிழிப்பு நிலையிலையே வைத்துள்ளன. பிற்போக்குச் சக்திகளின் கையில் சிக்கியிருக்கும் இந்த இரண்டு சாதனங்களும் திருந்தாதவரை நாட்டுக்குள் சுரண்டலை ஒழிப்பது மிகவும் சிரமமான காரியமாகத்தான் இருக்கும்"
   --நா.பார்த்தசாரதி (சாயங்கால மேகங்கள்)

Friday 11 May 2012

உன்னைக் காதலிப்பவர்களில் ஒருவன்

அந்தி மயங்கும் வேளையிலே தரணி ஆள வந்தவளே!

உலகத்தை இருட்டாக்கி நீமட்டும் ஒளிர்வதென்ன?

தோழியரின் புடைசூழ நீ வரும்போதெல்லாம்
என் முற்றத்தில் விழிவைத்துக் காத்திருப்பேன்;

என்னை காணும்போது உன் கன்னங்கள் சிவப்பதேனோ?
கருநீலப் புடவை உடுத்தியவளே!
பாலின் வெண்ணிறம் கொண்டவளே!
உன்னை காணும்போதெல்லாம் என் கண்கள் குளிருவதேனோ?
கண்கள் மட்டுமா குளிரந்தன?
இல்லை இல்லை என் மனமுமல்லவா குளிர்ந்தது!

நீ தேய்ந்தாலும் வளர்ந்தாலும் குணத்தில் தேய்வதில்லை;
அதனால் நானும் உன்னை வெறுப்பதில்லை;

நீ மழுதாய் காட்சிதரும் நாளே
எனக்கு சொர்க்கம்!
நீ முழுதாய் மறையும் நாளோ...!

உன்னை அடையப்போகும் நாள் எந்நாளோ?
அந்நாளை ஆவலுடன் எதிர்நோக்கும்,
உன்னை காதலிக்கும் கோடிக்கணக்கானவர்களில் ஒருவன்;
என்னை மட்டுமே நீ காதலிப்பாய் என நம்பும் ஒருவன்.


Thursday 10 May 2012

பாரதியாரின் உறுதிமொழிகள்

இயன்றவரை தமிழே பேசுவேன்,தமிழே எழுதுவேன்.சிந்தனை செய்வது தமிழிலேயே செய்வேன்.எப்போதும் பராசக்தி... முழு உலகின் முதற்பொருள்- அதனையே தியானஞ் செய்து கொண்டிருக்க முயல்வேன். அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருக்க முயல்வேன்.
     *         *          *
பொழுது வீணே கழிய இடங்கொடேன்.லௌகிக காரியங்களை ஊக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும், அவை தோன்றும் பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன்.
உடலை நல்ல காற்றாலும், இயன்றவரை சலிப்பதாலும் தாய்மையுறச் செய்வேன்.
மறைத்தும் தற்புகழ்ச்சி பாராட்டுதல் விரும்பேன்.
மூடரின் உள்ளத்தில் என்னைப் பற்றிபொய் மதிப்புண்டாக இடங்கொடேன்.
சர்வ சக்தியுடைய பரம்பொருளைத் தியானத்தால் என்னுள்ளே புகச்செய்து எனது தொழில்களெல்லாம் தேவர்களின் தொழில் போல் இயலுமாறு சூழ்வேன்.
பொய்மை, இரட்டுரமொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.
இடையறாத தொழில் புரிந்து இவ்வுலக பெருமைகள் பெற முயல்வேன். இல்லாவிடின் விதிவசமென்று மகிழ்சியோடிருப்பேன்.
எப்போதும் மலர்ந்த முகம், இனியசொல், தெளிந்த சித்தம் இவற்றோடிருப்பேன். ஓம்.
                  
                     *


Monday 7 May 2012

பாரதியின் பெருமை

எம்மான் பாரதியின் பாட்டை கேட்டால்
எம்மானும் துள்ளி குதித்தாடும்

அவன் பெயரை உச்சரித்தாலே
பயங்கள் பயந்தோடும்

அமைதிக் கொண்ட பெண்ணும்
அவனின் சக்தி பாடலைக் கேட்டிட்டால்
பராசக்தியாவாள்

அவனின் கண்ணம்மா பாடலைக் கேட்டிட்டால்
காதலில் விருப்பமில்லா இளைஞனுக்கும் காதல் செய்யத்தோன்றும்

அவனின் கண்ணண் பாட்டை கேட்டிட்டால்
நாத்திகனும் ஆத்திகனாவான்

அவனின் சுதந்திர பாடல்களைக்
கேட்டிட்டால்
சுதந்திரத்தின் அருமைத் தெரியும்

அவனின் பாஞ்சாலி சபதத்தை படித்திட்டால் பெண்ணின் பெருமைத் தெரியும்

அவனின் குயில் பாட்டை பாடினால்
கவிதையினுள் தத்துவத்தை உணர இயலும்

மொத்தத்தில் அவன் கவிதைகளை ஆழ்ந்து படித்தோரெல்லாம் கவிஞராவர்.

யாமறிந்த புலவர்களிலே கம்பனைப்போல்,வள்ளுவர்போல்,இளங்கோவைப்போல், பாரதியைப்போல்
பூமிதனில், யாங்கணுமே பிறந்ததில்லை;
உண்மை,வெறும் புகழ்ச்சில்லை.

-------அன்பன்
சக்கரவர்த்தி பாரதி


Sunday 6 May 2012

கல்வியின் தரம் தேய்கிறது

பௌர்ணமி போன்று ஒளி வீச வேண்டிய கல்வி அமாவாசை போன்று ஒளி மங்கியுள்ளது.ஞானத்தை பெறுவதற்காக கல்வி கற்பது போய் வெறும் வேலைக்கு உதவுவதாக மட்டுமே இக்காலக்கல்வி கற்பிக்கப்படுகிறது.மதிப்பெண்கள் பெறுபவரெல்லாம் நன்றாய் வாழப்போகிறவர்களாம்,மதிப்பெண் பெறமுடியாது போனவரெல்லாம் முட்டாள்களாம்.
ஒருவனின் செயல்திறனை நல்வழியில் ஊக்குவிப்பதற்கு கல்வி பயன்பட வேண்டுமேயன்றி அவன் மனனம் செய்யும் திறனை ஊக்குவிப்பதற்கல்ல.
இதனை உணர்ந்து அரசும் தனியார் பள்ளிகளும் என்று சரியான கல்வியளிக்கிறதோ அன்றுதான் நிலையான பௌர்ணமி மாணவர்களின் வாழ்வில் பிரகாசிக்கும்.


வழக்கு எண் 18/9

இன்றைய சுகவாழ்வு வாழ நினைக்கும் இளைஞர்களும்
காதலென நம்பி உடனே காதலிக்கத் துடிக்கும்
இளம் பெண்களும்
தங்கள் பிள்ளைகள் வெளியில் என்ன செய்கிறார்கள் என அறியாத பெற்றோர்களும் பார்க்க வேண்டிய முதல் தர திரைப்படம்
'வழக்கு எண் 18/9'.
பாலாஜி சக்திவேல் அவர்கட்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..
யாரும் குறை கூற முடியாத யதார்த்தமான நம்மை சுற்றி நடக்கும் பலரும் அறியாத பிரச்சனைகளை அறிய வைத்திருக்கிறார்.
ஒரு பணக்கார இளைஞன் செய்யும் தவற்றிற்க்காக இரு ஏழைகள் எவ்வாறு பலியாகின்றனர் என்பதுதான் கதை.
அதை யதார்த்தமான நிகழ்ச்சிகளுடன் நம் மனதில் பதிய வைத்திருக்கிறார் இயக்குநர்.